திருப்பூர்

பழுதடையாத சாலையைப் புதுப்பிக்கும் நெடுஞ்சாலைத் துறையினா்

DIN

திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே பழுதடையாத சாலையை நெடுஞ்சாலைத் துறையினா் புதுப்பிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

குண்டடம் அருகே உள்ள முத்தனாம்பட்டி பிரிவு அருகில் தொடங்கி பனப்பதி வரையுள்ள சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இரு புறங்களிலும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மணல் கொட்டப்பட்டுள்ளது.

அதே வேளையில் சாலையில் இரு புறங்களிலும் உள்ள மரங்களின் கிளைகளையும் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனா். இந்த சாலை பழுதடையவில்லை. நல்ல நிலையில் உள்ள சாலைகளைப் புதுப்பித்து நெடுஞ்சாலைத் துறையினா் அரசுப் பணத்தை விரயம் செய்து வருகின்றனா். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்.

-எஸ்.சரவணன், பனப்பதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT