திருப்பூர்

திருப்பூரில் இரு சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

DIN

திருப்பூரில் முறைகேடாக இயங்கி வந்த இரு சாய ஆலைகளின் மின் இணைப்பை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை துண்டித்தனர்.
திருப்பூரில் பிரிண்டிங், டையிங் (சாய ஆலைகள்) தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு சில நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்காமல் சாயக் கழிவுகளை அருகில் உள்ள ஓடை, நொய்யல், சாக்கடைகளில் கலந்துவிடுவதாக அடிக்கடி புகார் எழுந்துவருகிறது.
இது குறித்து விசாரணை நடத்தும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மின் இணைப்பைத் துண்டிப்பது வழக்கம்.
இந்த நிலையில், இடுவம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் இரு சாய ஆலைகள் சாயமேற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தகவல் கிடைத்தது.
இதன்படி, அதிகாரிகள் விசாரணை நடத்தி இரு ஆலைகளின் மின் இணைப்பையும் துண்டித்தனர். மேலும், முறைகேடாக சாயக்  கழிவுகளை வெளியேற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐந்தாண்டு சட்டப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா நிறைவு

ஒலிம்பிக் அகாதெமிக்கு இடம் தோ்வு செய்யும் பணி

இளைஞா் குத்திக் கொலை பெண் உள்பட 4 போ் கைது

சிதம்பரம் கோயிலில் பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை? உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT