திருப்பூர்

முருங்கைக்காய் விலை கிலோ ரூ.60

DIN

வெள்ளக்கோவிலில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ முருங்கைக்காய்  ரூ.60க்கு ஞாயிற்றுக்கிழமை கொள்முதல் செய்யப்பட்டது. 
 முத்தூர் சாலையில் உள்ள தனியார் கொள்முதல் மையத்தில் வாரந்தோறும் முருங்கைக்காய்கள் விற்பனைக்காக வாங்கப்படுகின்றன. 
கடந்த இரண்டு மாதங்களாக வரத்து மிகவும் குறைவாக இருந்த நிலையில் தற்போது வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. 
 கடந்த வாரம் 400 கிலோ மட்டுமே வரத்து இருந்தது. இந்த வாரம் 1050 கிலோ வரத்து இருந்தது. மர முருங்கைக்காய், செடி முருங்கைக்காய் என இரு வகை காய்களையும் கிலோ ரூ.60க்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். வரும் வாரங்களில் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT