திருப்பூர்

சிவன்மலை முருகன் கோயிலில் தொடங்கியது தைப்பூசத் தேரோட்டம்

DIN

காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழாவை ஒட்டி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் தேரோட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். 
சிவன்மலையில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா, கடந்த 12ஆம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயில் தேர் திருவிழா நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் காலை 9 மணிக்கு காலசாந்தி, திருக்கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக் கட்டளை நடைபெற்றது.
தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணி அளவில் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 5 மணி அளவில் தெற்கு ரத்த வீதியில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. இதில், ஈரோடு எம்.பி. எஸ்.செல்வகுமாரசின்னையன், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் ஏ.கயல்விழி, சட்டப் பேரவை உறுப்பினர் உ.தனியரசு, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் எஸ்.வி.ஹர்ஷினி (திருப்பூர்), எம்.கண்ணதாசன் (சிவன்மலை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 தொடர்ந்து தேரோட்டம்   செவ்வாய், புதன்கிழமை ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை சிவன்மலையை வலம் வரும் தேர் கிரிவலப் பாதையில் நிலை நிறுத்தப்படும். 3ஆம் நாளான புதன்கிழமை அங்கிருந்து தேர் வடம் பிடிக்கப்பட்டு நிலையைச் சென்றடையும். தேரோட்டம் நடைபெறும் 3 நாள்களும் அன்னதானம், பக்திச் சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். வரும் 30ஆம் தேதி தேர்த் திருவிழா நிறைவடைகிறது. தேர்த் திருவிழாவையொட்டி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் காங்கயம் கிளை சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT