திருப்பூர்

கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு

DIN


அவிநாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த நாயை தீயணைப்புத் துறையினர் உயிருடன் சனிக்கிழமை மீட்டனர்.
 அவிநாசி அருகே கருக்கன்காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த சைமன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான 8 மாத நாய்க்குட்டி அருகில் உள்ள 100 அடி ஆழமுள்ள கிணற்றில் சனிக்கிழமை தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த அவிநாசி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பா. பாலசுப்பிரமணியம், வீரர்கள் சீனிவாசன், பார்த்திபன், கார்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றுக்குள் விழுந்த நாயை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 
நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின் நாய் உயிருடன் மீட்கப்பட்டது. கிணற்றுக்குள் விழுந்த நாயை மனிதாபிமானத்துடன் வந்து மீட்டுக் கொடுத்த தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT