திருப்பூர்

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

DIN

உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை ஒட்டி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியரக  அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, குழந்தைத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து மீட்கப்பட்டு கல்வி பயின்று 10, 12-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 மாணவ, மாணவிளுக்கு தலா ரூ. 6ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. 
நிறைவாக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், தொழிலாளர் உதவி ஆணையர் சு.பிரேமா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), கீதா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT