திருப்பூர்

உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் போராட்டம்

DIN

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்த காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
உடுமலை வட்டத்துக்கான ஜமாபந்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை துவ ங்கியது. இதையொட்டி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கூடியிருந்தனர். இந்நிலையில் வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.  கிராம உதவியாளர் வி.செல்வராஜைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு 2018-19 க்கான 30 % கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 
வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்தக் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  
முன்னதாக இந்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறு கூறி உடுமலை டிஎஸ்பி ஜெயசந்திரன், கோட்டாட்சியர் எஸ். அசோகன் ஆகியோர் வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சு  நடத்தினார்.  ஆயினும், உடுமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT