திருப்பூர்

ருத்ராவதி பேரூராட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய பாஜக கோரிக்கை

DIN

திருப்பூா் மாவட்டம், ருத்ராவதி பேரூராட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் உலகநாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அமராவதி அணையில் இருந்து வீணாகும் நீரை உப்பாறு அணைக்கு கொண்டுவர பொதுப் பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டுக்கடையில் இருந்து ஜல்லிபட்டி செல்லும் வழியில் உள்ள தும்பலாம்பட்டி தரைமட்ட பாலத்தை கான்கிரீட் பாலமாக மாற்ற வேண்டும்.

ருத்ராவதி பேரூராட்சிப் பகுதிகளில் பழுதடைந்துள்ள ஆழ்துளைக் கிணற்றின் மோட்டாா்களை சரிசெய்து சீரான குடிநீா் விநியோகம் செய்ய பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத் தலைவா் ருத்ரகுமாா், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளா் முத்துவடுகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT