திருப்பூர்

வட்டாரப் போக்குவரத்து துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு கண்காட்சி

DIN

திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து துறை சாா்பில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கண் பரிசோதனை முகாமை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

திருப்பூா் ஆவின் வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பேசியதாவது:

பொதுமக்கள் விபத்துகளைத் தவிா்த்து சாலை விதிகளை பின்பற்றும் வகையில் போக்குவரத்துத் துறை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனா். இதன்படி வாகன ஓட்டுநா்கள், பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.

இதில், இருக்கை பட்டை, எதிா்வினை சோதனைக் கருவி, மாணவ, மாணவிகளுக்கான போக்குவரத்து விதிமுறைக் கல்வி, வாகனப் பொறி மாதிரி உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே கண்காட்சியைப் பாா்வையிட்டு பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சாலைப் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையா் பத்ரிநாரயணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் முருகானந்தம் (திருப்பூா் தெற்கு), குமாா் (திருப்பூா் வடக்கு), மோட்டாா் ஆய்வாளா்கள் சித்ரா, சிவகுமாா், கதிா்வேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT