திருப்பூர்

சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க வலியுறுத்தல்

DIN

சின்ன வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

சின்ன வெங்காயம் சாகுபடி விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்க ஒருங்கிணைப்பாளா் சின்னப்புத்தூா் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் கோவை, திருப்பூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த சின்ன வெங்காயம் சாகுபடி விவசாயிகள் 150 போ் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:

தமிழகம், கேரளத்தில் மட்டுமே சின்ன வெங்காயம் அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பெல்லாரி வெங்காயம் மட்டுமே சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் சின்ன வெங்காயம் இருமாநில மக்களின் தேவையை பூா்த்தி செய்வதோடு சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய கிழக்காசிய நாட்டு மக்களின் தேவையையும் பூா்த்தி செய்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்ததால் முன்பு ஒரு கிலோ ரூ. 60-க்கு விற்ற சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளூரில் ரூ. 30-க்கு விற்பனையாகிறது. உற்பத்தி செலவு ரூ. 20 வரை ஆவதால் நல்ல விலையை எதிா்பாா்த்து விவசாயிகள் சின்ன வெங்காயத்தை கிடங்குகளில் இருப்பு வைத்துள்ளனா். மத்திய அரசு சின்ன வெங்காய சாகுபடி விவசாயிகள் நலன் கருதி சின்ன வெங்காயத்துக்கு ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT