திருப்பூர்

​மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படுகின்றன: ஜவாஹிருல்லா 

DIN


திருப்பூர்: மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். 

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்துக்கு மமக ஆதரவு தெரிவிக்கிறது. விவசாயிகளுடைய நிலங்களை அபகரித்து, உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை தவறானது. இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் விவசாயிகளைக் கைது செய்வது கண்டிக்கத்தக்கது. விவசாய நிலங்களில் ஏற்கெனவே உயர் மின் கோபுரங்கள் அமைத்திருந்தால் உரிய இழப்பீடும், மாத வாடகையும் விவசாயிகளுக்கு செலுத்த வேண்டும். மேலும் புதைவடம் வழியாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும்.

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு ஒருபோதும் இருக்காது என எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவாதம் அளித்துள்ளார். அதன்பேரில் ஹிந்தி திணிப்பு போராட்டத்தை திமுக தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. 

இந்நிலையில் தாய்மொழி முதலிலும், இரண்டாவதாக ஹிந்தி மொழி இருக்கும் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தமிழக மக்கள், அரசியல் கட்சியினரின் நிலைப்பாட்டுக்கு எதிராகவே உள்ளது. ஆகவே, மு.க.ஸ்டாலின் இந்தப் போராட்டத்தைக் கைவிடக்கூடாது என்பது எங்களின் கருத்து என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT