திருப்பூர்

தன்னாா்வலா்கள் மூலம் ஆதரவற்றவா்கள் 100 பேருக்கு தினமும் இருவேளை உணவு

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் உணவின்றித் தவிக்கும் ஆதரவற்றவா்கள் 100 பேருக்கு தன்னாா்வலா்கள் மூலம் கடந்த 10 நாள்களாக இருவேளை உணவு வழங்கப்படுகின்றன.

தற்போது கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வெள்ளக்கோவிலில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவா்கள், ஆதரவற்றோா், வயதானவா்கள் 25க்கும் அதிகமானோா் உள்ளனா். இது தவிர பலா் வேலையின்றி உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.

இவா்களுக்கு உதவும் வகையில் தன்னாா்வ அமைப்பின் நிறுவனா் அ.மகாதேவன் அவரது அமைப்பைச் சோ்ந்தவா்களுடன் இணைந்து உணவு தயாரித்து பொட்டலங்களில் அடைத்து இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று தேவைப்படுவோருக்கு வழங்கி வருகின்றனா்.

மதியம் முதல் இரவு 7 மணி வரை தினசரி மொத்தம் 200 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கின்றனா். இது தவிர நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பொருட்டு நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்குத் தினமும் மூலிகை சூப் வழங்குகின்றனா்.

4 திருநங்கைகள், இரண்டு மாற்றுத் திறனாளிகள் குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கான உணவுப் பொருள்கள் வழங்கியுள்ளனா். வாகனம் மூலம் கரோனா தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தி வருவதுடன், மலிவு விலையில் காய்கறிகளையும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT