திருப்பூர்

ஒப்பந்தப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய தம்பதி

DIN

திருப்பூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் 16 பேருக்கு நிவாரணப் பொருள்களை நிரந்தரமாக பணியாற்றி வரும் தம்பதியினா் சனிக்கிழமை வழங்கினா்.

திருப்பூா் மாநகராட்சி 1ஆவது மண்டலத்தில் பணியாற்றி வருபவா் சின்னசாமி. இவரது மனைவி சுந்தரி. இவா்கள் இருவரும் நிரந்தர தூய்மைப் பணியாளா்களாக வேலை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 16 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க முடிவு செய்திருந்தனா்.

இதையடுத்து 1ஆவது மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையா் வாசுகுமாா், சுகாதார அலுவலா் எஸ்.முருகன் ஆகியோா் முன்னிலையில் சின்னசாமி, சுந்தரி தம்பதியினா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 16 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT