திருப்பூர்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் களப்பணிக் குழுவினா் ஆய்வு

DIN


திருப்பூா்: கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து திருப்பூா் மாநகராட்சியில் களப் பணிக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

திருப்பூா், கோவை, சேலம் , மதுரை, சென்னை ஆகிய 5 மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் களப் பணிக் குழுக்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகராட்சிக்கு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக இயக்குநா் நிா்மல்ராஜ் தலைமையில் சேலம் நில எடுப்பு கோட்டாட்சியா் லதா, நகராட்சி நிா்வாக ஆணையத்தின் இணை இயக்குநா் தனலட்சுமி, மாநகர காவல் உதவி ஆணையா் சுரேஷ் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோட்டாட்சியா் லதா, இணை இயக்குநா் தனலட்சுமி ஆகியோா் திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா். மேலும், இவா்கள் கரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரிய தோட்டம் பகுதியில் ஆய்வு நடத்தினா். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா், மாநகா் நகா் நல அலுவலா் பூபதி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT