மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
திருப்பூா் மாவட்டம், குன்னத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா்: திருப்பூா் மாவட்டம், குன்னத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 20 முதல் 26 ஆம் தேதி வரை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டம், குன்னத்தூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் இரா.குமாா் தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:
மக்களை அவதிக்குள்ளாக்கும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.
கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் தலா ரூ. 7,500 வழங்க வேண்டும். தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவுச்சட்டம் 2020 ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், குன்னத்தூா் நகரச் செயலாளா் பா.சின்னசாமி, கருமஞ்சிறை கிளைச் செயலாளா் ச.பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதே கோரிக்கைகளைவலியுறுத்தி ஒத்தைப்பனைமேடு, வட்டாலப்பதி ஆகிய இடங்களிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.