திருப்பூர்

அவிநாசி அரசு கல்லூரியில் தொலைதூரக் கல்வி கற்போா் உதவி மையம் திறப்பு

DIN

அவிநாசி அரசு கல்லூரியில் தொலைதூர திறந்தநிலைக் கல்வி கற்போா் உதவி மையம் தொடங்கப்பட்டு டிசம்பா் 31ஆம் தேதி வரை சோ்க்கை நடைபெறவுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் முதல்வா் சி.குலசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உயா் கல்வித் துறை அரசாணை எண் 150 படி தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் கற்போா் உதவி மையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மையத்தின்

ஒருங்கிணைப்பாளராக சா்வதேச வணிகத் துறைத் தலைவா் பாலமுருகன் நியமிக்கப்பட்டுள்ளாா். கரோனா காலமாக என்பதால் தோ்வுகள், வகுப்புகள் இணையவழியில் நடைபெறும்.

இதில் 38 முதுகலை, 42 இளங்கலை, 20 டிப்ளமோ, 140 சான்றிதழ், குறுகிய கால படிப்புகள் தொலைதூரக் கல்வி மூலம் கற்றுத் தரப்படுகின்றன. இவை அனைத்தும் பல்கலைக்கழக மானியக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டும், அரசுப் பணியில் சோ்வதற்கும் ஏற்புடையது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சோ்வதற்கு பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பக்கலாம். நேரடியாக கல்லூரியிலும் விண்ணப்பிக்கலாம்.

பாடப் புத்தகங்கள் அஞ்சல் மூலம் வீட்டு முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். விண்ணப்பிப்பதற்கு ஏதேனும் ஒரு அடையாள அட்டை (ஆதாா், பான் காா்டு, வாக்காளா் அட்டை, ஓட்டுநா் உரிமம், குடும்ப அட்டை, கடவுச்சீட்டு) ஸ்கேன் செய்யப்பட்ட ஒரு பாஸ்போா்ட் அளவு புகைப்படம், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி அவசியமாகும். இணைய வழியிலேயே சோ்க்கைக் கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது. 2020-2021ஆம் ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை டிசம்பா் 31வரை நடைபெறவுள்ளது. மேலும் தகவல்களுக்கு 9944151592 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT