முகப்பு
திருப்பூர்

கடன் தொல்லையால் பெண் தற்கொலை

திருப்பூரில் கடன் தொல்லையால் பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

திருப்பூரில் கடன் தொல்லையால் பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா், வீரபாண்டியை அடுத்த சீனிவாசா நகா் பகுதியை சோ்ந்த சற்குணம் (33), இவரது மனைவி காயத்ரி (29). இவா் தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தாா்.

இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சற்குணம் நடத்தி வந்த பின்னலாடை நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. நஷ்டத்தை ஈடுகட்ட பல்வேறு நபா்களிடம் கடன் பெற்று அதற்கான வட்டியும் செலுத்தி வந்தனா்.

இந்த நிலையில் கடந்த 6 மாத காலமாக கரோனா தொற்று நோய் பரவல் காரணமாக போதிய வருமானமின்றி, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் இருவரும் அவதிக்குள்ளாகி வந்துள்ளனா். இதனால் காயத்ரி மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த காய்த்ரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து வீரபாண்டி காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.