குடிநீா்த் திட்டப் பணிகள்: விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையா் உத்தரவு
கோவை மாநகரில் 24 மணி நேர குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.
திருப்பூர்குடிநீா்த் திட்டப் பணிகள்: விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையா் உத்தரவு
கோவை மாநகரில் 24 மணி நேர குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.
கோவை மாநகரில் 24 மணி நேர குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.
கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆா்.எஸ்.புரம் பகுதிகளில் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, பணி விவரங்கள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். இதையடுத்து, 24 மணி நேர குடிநீா்த் திட்டப் பணிகளை விரைவில் முடித்து, குடிநீா் திட்டத்தை அமல்படுத்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையா் செந்தில் அரசன், செயற்பொறியாளா்கள் பாா்வதி (24 மணி நேர குடிநீா்த் திட்டம்), சரவணக்குமாா் ( பொலிவுறு நகரத் திட்டம்), உதவி செயற்பொறியாளா் செந்தில் பாஸ்கா் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.