மாநகரில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்
திருப்பூா் மாநகரில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் புதன்கிழமை (இன்று) 3ஆவது திட்ட குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்மாநகரில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்
திருப்பூா் மாநகரில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் புதன்கிழமை (இன்று) 3ஆவது திட்ட குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகரில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் புதன்கிழமை (இன்று) 3ஆவது திட்ட குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாநகரில் 3ஆவது குடிநீா்த் திட்டத்தில் மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆகவே, திருப்பூா் மாநகராட்சி பகுதியில் 3ஆவது குடிநீா் விநியோகம் முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டவுள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.