திருப்பூர்

வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினா் போராட்டம்

DIN

வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக சாா்பில் பேரூராட்சி அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தாராபுரத்தை அடுத்த முலனூரில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில், தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சின்னக்கம்பாளையம், கொளத்துப்பாளையம், மூலனூா் பேரூராட்சிகள் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் அ. ரவிசந்திரன் தலைமை வகித்தாா்.

இதில், வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு 300க்கும் மேற்பட்டோா் கொளத்துப்பாளையம் பேருந்து நிறுத்தம் மூலனூா் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பேரணியாக சென்று பேரூராட்சி அலுவலா்களிடம் மனு அளித்தனா்.

அதேபோல, கன்னிவாடி, குண்டடம் ருத்ராபதி பேரூராட்சி அலுவலகங்களிலும் பாமக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT