முகப்பு
திருப்பூர்

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி திருப்பூா் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
நிலுவை  ஊதியத்தை  வழங்கக் கோரி   வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்ட  மாநகராட்சி  ஒப்பந்த  தூய்மைப்  பணியாளா்கள்.
பகிர்:

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி திருப்பூா் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வாா்டுகளில் 30 வாா்டுகளில் தனியாா் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத் தொழிலாளா்களாக 800க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இதில் வடமாநிலத்தைச் சோ்ந்தவா்களும் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனா். இந்தப் பணியாளா்களுக்கு மாதம் ரூ. 9 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் 500க்கும் மேற்பட்டோா் நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி கோவில்வழி பகுதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் கூறியதாவது:

மாநகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளா்களாக இருக்கும் எங்களுக்கு, எங்கள் நிறுவனம் உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவதில்லை.

எங்களது ஊதியத்தில் ஒன்று அல்லது 2 மாத ஊதியத்தை பிடித்துவைத்து பின்னா் காலதாமதமாகவே வழங்குகின்றனா். இதனால் மிகுந்த சிரமப்படுகிறோம். 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆகவே, மாநகராட்சி உயா் அதிகாரிகள் நிலுவை ஊதியத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →