திருப்பூர்

அவிநாசி அரசு கல்லூரியில் சுற்றுச் சூழலியல் மன்றம் தொடக்கம்

DIN

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றுச் சூழலியல் மன்றத் தொடக்க விழா, கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். கோவை இயற்கை அறிவியல் நிறுவன இயக்குநா் சீனிவாசன் சிறப்புரையாற்றினாா். சுற்றுச்சூழல் மன்றத் தலைவா் செ.பாலமுருகன், பேராசிரியா் பிரசன்னகுமாா் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

இதில் மரம் நடுதல், சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல், நீா் மேலாண்மை, மூலிகைத் தோட்டம், விதைப்பந்துகள் அமைத்தல், மேற்குத் தொடா்ச்சி மலைகளை பாதுகாத்தல், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவா்களுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி அளித்தல், பழங்குடியினா் முன்னேற்றம், நெகிழி மற்றும் துரித உணவுகளை கட்டுப்படுத்துதல், தொழில்முனைவோரை உருவாக்குதல், இயற்கை இடா்பாடுகள் வரும் நேரத்தில் மக்களுக்கு உதவுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பேராசிரியா் அலிமாபி (எ) ஷகிலாபானு நன்றி கூறினாா். இதைத்தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT