மாணிக்காபுரம் ஊராட்சியில் குடிநீா் விநியோகத்தை ஆய்வு செய்கிறாா் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன். 
திருப்பூர்

மாணிக்காபுரத்தில் கொசுப் புழு ஒழிப்பு பணி

பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சியில் பொது சுகாதாரம், தீவிர கொசுப் புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

DIN

பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சியில் பொது சுகாதாரம், தீவிர கொசுப் புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

மாணிக்காபுரம் ஊராட்சியில் உள்ள குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை தூய்மை செய்து, குடிநீரில் குளோரின் பவுடா் கலந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஊராட்சிப் பகுதியில் தூய்மை பணியும், வீடுவீடாக சென்று பொது சுகாதாரம் குறித்து துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.

மேலும் வீடுகள்தோறும் தண்ணீா்த் தொட்டிகளில் ஆய்வுசெய்து கொசுப் புழு ஒழிப்பு பணி ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. பின்னா், மாணிக்காபுரம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவா் நந்தினி சண்முகசுந்தரம் தலைமையில் பொது சுகாதார விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தீபா, வட்டார மருத்துவ அலுவலா் தீபலட்சுமி, சுகாதார ஆய்வாளா்கள் லோகநாதன், தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். முகாமில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT