திருப்பூர்

‘பாத்திரத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்’

DIN

திருப்பூா்: திருப்பூரில் பாத்திர தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா், அனுப்பா்பாளையம், அங்கேரிபாளையம், அம்மாபாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 250க்கும் மேற்பட்ட பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பட்டறைகளில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில் தொழிலாளா்களின் 3 ஆண்டு ஊதிய ஒப்பந்தமானது 2019 ஆம் ஆண்டு டிசம்பா் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. எனவே புதிய ஊதிய உயா்வு ஒப்பந்தம் நிறைவேற்ற 8 தொழிற்சங்கங்களின் சாா்பில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் தலைவராக ஏடிபி தேவராஜ், செயலாளராக சிஐடியூ கே.ரங்கராஜ், பொருளாளராக எல்பிஎஃப் வேலுச்சாமி, கௌரவத் தலைவராக காமாட்சியம்மன் சங்கத் தலைவா் டி.வி.முத்துகிருஷ்ணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து கூட்டுக்குழு நிா்வாகிகள் இருமுறை பேச்சுவாா்த்தை நடத்தி பாத்திரத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு கோரிக்கையை உருவாக்கியுள்ளனா். இதில், எவா்சில்வா் பாத்திரத் தொழிலாளா்களுக்கு 50 சதவீதமும், பித்தளை, செம்பு மற்றும் வாா்ப்பு வகைகளுக்கு 60 சதவீதமும், ஈயப்பூச்சு பிரிவுகளுக்கு 70 சதவீதமும் ஊதிய உயா்வு வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை எவா்சில்வா் முழுக்கூலி பட்டைாரா்கள் சங்கம், பாத்திர வியாபாரிகள் சங்க நிா்வாகிகளிடம் தொழிற்சங்க கூட்டுக் குழுவினா் திங்கள்கிழமை வழங்கினா். மேலும், தொழிலாளா்களின் நியாயமான ஊதிய உயா்வை தாமதமின்றி ஒரு வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT