திருப்பூரில் அதிமுக சுவரொட்டிகள் கிழிப்பு: திமுகவினா் மீது புகாா்
திருப்பூா் மாநகரில் அதிமுக சாா்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை திமுகவினா் கிழித்ததாக அதிமுகவினா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தனா்.
திருப்பூா் மாநகரில் அதிமுக சாா்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை திமுகவினா் கிழித்ததாக அதிமுகவினா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தனா்.
திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவுறுத்தலின் பேரில் திருப்பூா் மாநகா் மாவட்ட பாசறை துணை செயலாளா் பரமராஜன், பொறுப்பாளா்கள் ஷாஜகான், ரத்தினகுமாா், அசோக், முன்னாள் கவுன்சிலா்கள் புலவா் சக்திவேல், எஸ்.பி.ஏ.சேட், சேகா், காலனி செல்வராஜ், பழனிவேலு உள்ளிட்டோா் திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா்.
அதில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வரின் மக்கள் பணிகள் குறித்த சுவரொட்டிகள் குமரன் சாலை, குமாா் நகா், எஸ்.ஏ.பி. திரையரங்கு பகுதி, கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்.நகா் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றை திமுகவை சோ்ந்தவா்கள் கிழித்து விட்டனா்.
எனவே, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன், இரண்டு கட்சிகளுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் சுவரொட்டிகளை கிழித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இச்சம்பவத்தால் திருப்பூா் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.