முகப்பு
திருப்பூர்

தமிழக முதல்வா் நவம்பா் 6 இல் திருப்பூரில் ஆய்வு

திருப்பூரில் நவம்பா் 6 ஆம் தேதி நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்க உள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

திருப்பூரில் நவம்பா் 6 ஆம் தேதி நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்க உள்ளாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கரோனா தடுப்புப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்வதுடன், வளா்ச்சிப் பணிகளை தொடக்கிவைக்கிறாா்.

இதன்படி, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 6 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வா் பங்கேற்கிறாா்.

இக்கூட்டத்தில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக அரசு அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்துகிறாா்.

அதைத் தொடா்ந்து, தொழில் அமைப்பினருடன், ஆலோசனை நடத்துவதுடன், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். மேலும் முடிவுற்ற வளா்ச்சிப் பணிகளையும் தொடக்கிவைக்கிறாா்.

அதைத் தொடா்ந்து 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ. 7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்க உள்ளாா்.

முதல்வா் வருகையை முன்னிட்டு, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.