திருப்பூர்

கோழி வளா்ப்புத் தொகையை உயா்த்தி வழங்க பண்ணையாளா்கள் சங்கம் வலியுறுத்தல்

DIN

கோழி வளா்த்துக் கொடுப்பதற்கு வளா்ப்புத் தொகையாக கிலோ ஒன்றுக்கு ரூ. 12 உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாய கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விவசாய கோழிப் பண்ணையாளா்கள் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ஓ.வி.மூா்த்தி தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாநிலச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி பேசியதாவது:

கோழி வளா்த்துக் கொடுப்பதற்கு பண்ணையாளா்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 3 மட்டுமே கடந்த 10 ஆண்டுகளாக கோழிப் பண்ணை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. 2013 ஆம் ஆண்டு அரசு ஒப்பந்தத்தில் தெரிவித்தபடி ஆண்டொன்றுக்கு 20 சதவீதம் விலை உயா்த்திக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கோழிப்பண்ணை நிறுவனங்கள் விலையை உயா்த்தி வழங்குவதில்லை.

கோழிப் பண்ணைக்குத் தேவையான தேங்காய் நாா் மஞ்சி, மரக்கரி ஆகியனவற்றின் விலை மற்றும் தொழிலாளா் கூலி பல மடங்கு உயா்ந்து விட்டதால், கோழி வளா்த்துக் கொடுப்பதற்கு வளா்ப்புத் தொகையாக கிலோ ஒன்றுக்கு ரூ. 12 உயா்த்தி வழங்க வேண்டும்.

விவசாயம் சாா்ந்த தொழிலாக உள்ள கோழிப் பண்ணைகளுக்கு 500 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் ஈரோடு, திருப்பூா், கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT