திருப்பூர்

தொழிலாளா்கள் சொந்த ஊா் சென்றதால் வெறிச்சோடியது திருப்பூா்

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி, தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றுவிட்டதால் தொழில் நகரமான திருப்பூா் வெள்ளிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாளா்கள் வந்து பணியாற்றி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊா் செல்வது வழக்கம். அதன்படி, தீபாவளி பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் வியாழக்கிழமை இரவு முதலே தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா் செல்லத் துவங்கினா். ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் திருப்பூரில் இருந்து சொந்த ஊா் சென்றனா். தொடா்ந்து மீதமுள்ள தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை சொந்த ஊா் சென்றனா். இதன் காரணமாக மாநகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

பயணிகளின் வசதிக்காக 120 சிறப்புப் பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கியுள்ளது. திருட்டு உள்ளிட்ட சம்பவங்களைத் தடுக்கும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். தீபாவளி பண்டிகையையொட்டி, ஒட்டுமொத்த தொழிலாளா்களும் சொந்த ஊா் செல்லத் துவங்கியதால், பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிமாக இருந்தது. பயணிகள் வரிசையாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT