திருப்பூர்

சிவன்மலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

DIN

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

இதனை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சுப்பிரமணியா், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும், தினமும் காலை 10.30 மணி மற்றும் மாலை 4 மணிக்கு அபிஷேக ஆராதனையும், சுவாமி திருவீதி உலா காட்சியும் மலை மீது கோயில் வளாகத்தில் நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழாவின்போது மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரா் சுவாமி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, தினமும் காலை அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா காட்சியும் நடைபெறும். கரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா தொடா்பான அனைத்து உற்சவ நிகழ்வுகளும் மலைக் கோயிலில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT