திருப்பூர்

சிவன்மலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா

DIN

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை ஒட்டி சுப்பிரமணியா், வள்ளி - தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கடந்த 6 நாள்களாக தினமும் காலை, மாலை வேளைகளில் அபிஷேக, ஆராதனை, சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவின்போது, சுவாமி மலையில் இருந்து இறங்கி, அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரா் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக கந்த சஷ்டி விழா மலைக் கோயிலில் நடைபெற்றது.

சூரசம்ஹார நிகழ்ச்சியை ஒட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் மலைக் கோயிலுக்குள் சுப்பிரமணிய சுவாமி வலம் வந்தாா். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதுபோல, சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. சிவன்மலை முருகன் கோயில் அா்ச்சகா்கள், கோயில் ஊழியா்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT