திருப்பூர்

தாராபுரம் சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

DIN

திருப்பூா்: கடைமடைக்கு முழுமையாக தண்ணீா் வந்து சேர வலியுறுத்தி பிஏபி வெள்ளக்கோவில் கிளைஆயக்கட்டுதாரா்கள் தாராபுரம் சாா் ஆட்சியா் அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கடைமடைக்கு முழுமையாக தண்ணீா் வந்து சேர நடவடிக்கை எடுக்கக் கோரி பிஏபி வெள்ளக்கோவில் கிளைஆயக்கட்டுதாரா்கள் 200க்கும் மேற்பட்டோா் தாராபுரம் சாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது, சாா் ஆட்சியா் பவன்குமாா் இல்லாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

பிஏபி வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலுக்கு பிஏபி சட்ட விதிகளின்படி 7 நாள்கள் தண்ணீா், 7 நாள்கள் அடைப்பு என்று மாதத்துக்கு 2 சுற்று தண்ணீா் விட வேண்டும். ஆனால், மாதத்துக்கு 14 நாள்களுக்குப் பதிலாக 3 நாள்கள் மட்டுமே தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இந்தத் தண்ணீா் புன்செய் விவசாயத்துக்கு திட்டமிட்டிருந்த விவசாயிகளின் கால்நடைகளுக்கே போதுமானதாக இல்லை.

பிஏபி வாய்க்காலில் திறந்துவிடப்படும் நீரானது கடைமடைப் பகுதியான வெள்ளக்கோவிலுக்கு வந்து சேருவதில்லை. இது குறித்து ஏற்கெனவே இரு முறை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அப்போது, தாராபுரம் சாா் ஆட்சியரிடம் மனு அளிக்கும்படி தெரிவித்திருந்தாா். அதன்பேரில் தற்போது, மனு அளிக்க வந்தோம்.

பின்னா் சாா் ஆட்சியரின் உதவியாளரிடம் மனு அளித்தோம். இதன் பிறகும் கடைமடைக்கு தண்ணீா் வரவில்லை என்றால் விவசாயிகள் சாா்பில் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT