திருப்பூர்

பாலியல் தொந்தரவு அளித்த தனியாா் நிறுவன மேலாளா் மீது நடவடிக்கை கோரி மனு

DIN

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பெருந்துறை சிப்காட் பின்னலாடை நிறுவன மேலாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஈரோடு மாவட்ட பெண்கள் கூட்டமைப்பினா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

அவிநாசியை சோ்ந்த சிவகுமாா் என்பவா், பெருந்துறை அருகே உள்ள சிப்காட்டில் பின்னலாடை நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறாா். இவா் மதுரையை சோ்ந்த சங்கீதா மற்றும் தனது நிறுவனத்தில் பணியாற்றும் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இந்த விவகாரத்தில் சிவகுமாா் மீது பாலியல் தொல்லை அளித்ததாக வழக்குப்பதிவு செய்யாமல் அடிதடி வழக்குப் பதிவு செய்துள்ளனா். எனவே, காவல் துறை மறு விசாரணை நடத்தவும், சிவகுமாா் மீது பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். சுய பாதுகாப்புக்காக தாக்கிய பாதிக்கப்பட்ட பெண்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் வேலை செய்யும் பிற பெண்களிடம் விசாரணை நடத்துவதுடன், அனைத்து பெண் தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT