திருப்பூர்

பிஏபி பாசன வாய்க்காலில் வெள்ளகோவில் பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்

DIN

காங்கயம்: பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் ஆயக்கட்டுக்கு உரிய பாசன நீர் வழங்க வலியுறுத்தி, காங்கயத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கயம் நகரம், திருப்பூர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு பாரதீய கிசான் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் துணை செயலர் பெரியசாமி தலைமை வகித்தார்.

இதில், பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தின் (பிஏபி) மூலம் அனைத்து பாசன மடைகளுக்கும் 7 நாள் பாசனம், 7 நாள் அடைப்பு என்ற விகிதப்படி, 14 நாள்களுக்கு 1 சுற்று என்னும் அளவில் பாசன நீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். ஆனால், வெள்ளகோவில் பகுதிகளுக்கு விதிகளுக்குப் புறம்பாக 7 நாள் பாசனத்திற்குப் பதிலாக 2 அல்லது 3 நாள்கள் மட்டுமே பாசன நீர் வழங்கப்படுகிறது.

இது குறித்து பிஏபி பாசனத் திட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை  எடுக்கப்படவில்லை. எனவே, வெள்ளகோவில் பகுதி பாசன மடைகளுக்கு 7 நாள் திறப்பு, 7 நாள் அடைப்பு என்ற சட்ட விதிகளின் படி, முறையாக நீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், விஹெச்பி மாவட்டத் தலைவர் ராஜகோபால், பிஜேபி மாவட்டத் தலைவர் கோபாலகிருஷ்ணன், பிஜேபி நகரத் தலைவர் கலா உள்பட பாரதீய கிசான் சங்க நிர்வாகிகள், வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT