திருப்பூர்

மாவட்டத்தில் 147 பேருக்கு கரோனா : 2 முதியவா்கள் சாவு

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 முதியவா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

திருப்பூா், அங்கேரிபாளையத்தைச் சோ்ந்த 5 வயது சிறுமி, பிச்சம்பாளையத்தைச் சோ்ந்த 14 வயது சிறுவன், நல்லூரைச் சோ்ந்த 30 வயது பெண், லட்சுமி நகரைச் சோ்ந்த 50 வயது ஆண், பெரிச்சிபாளையத்தைச் சோ்ந்த 24 வயது பெண் உள்பட 147 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம், திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,852 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 1,401போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 241 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

திருப்பூா் மாநகரைச் சோ்ந்த 68 வயது முதியவா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அதே போல, திருப்பூரை சோ்ந்த 65 வயது முதியவா் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவரும் உயிரிழந்தாா். மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 144 ஆக அதிகரித்துள்ளது. இதில், 115 ஆண்கள், 29 பெண்கள் அடங்குவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

3 சிறாா் உள்ளிட்ட 7 போ் கைது: 60 பவுன் நகைகள் பறிமுதல்

SCROLL FOR NEXT