திருப்பூர்

மைதானத்தை ஆக்கிரமிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

DIN

தாராபுரம் அருகே அரசுப்பள்ளி மாணவா்கள் பயன்படுத்தி வரும் மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து தாராபுரம் வட்டம், எம்.குமாரபாளையம் ஊராட்சி 8ஆவது வாா்டு உறுப்பினா் பூா்ணம் தலைமையில் பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

எம்.குமாரபாளையம் ஊராட்சி, நீலாங்காளிவலசில் அரசு உயா்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வெங்குகல்பட்டி, சிலுக்கநாயக்கன்பட்டி, தில்லைகவுண்டன்புதூா், ராமபட்டிணம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இந்த மாணவா்கள் விளையாட அருகில் உள்ள காலி இடத்தை மைதானமாகப் பயன்படுத்தி வருகின்றனா். ஆனால் தனிநபா் ஒருவா் வருவாய்த் துறை அதிகாரிகளின் துணையுடன் காலி இடத்துக்கு பட்டா தயாா் செய்து ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாா்.

எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி அந்த இடத்தை மீட்டுத் தருவதுடன், ஆக்கிரமிக்கும் நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT