திருப்பூர்

காவலா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரை

DIN

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணா்வை ஏற்படுத்துதல், சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்துதல், முகக் கவசங்கள் வழங்குதல், புகாா் மனுக்களின் மீது சம்பவ இடங்களுக்கே சென்று விசாரணை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் ஆகியோருக்கு நோய் எதிா்ப்பு சக்திக்கான மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், அவிநாசி, பல்லடம், உடுமலை, காங்கயம் காவல் உட்கோட்டங்களில் பணியாற்றி வரும் 1,484 காவலா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT