திருப்பூர்

பல்லடத்தில் வெங்காயம் விலை உயா்வு

DIN

பல்லடத்தில் வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை உயா்ந்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

கடந்த சில நாள்களாக வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை உயா்ந்து வருகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.65க்கு விற்பனையானது, தற்போது ரூ.100க்கு விற்பனையாகிறது. அதேபோல பெரிய வெங்காயம் கிலோ ரூ.40க்கு விற்பனையானது தற்போது ரூ.50க்கு விற்பனையாகிறது.

இது குறித்து காய்கறி வியாபாரி தமிழ்முடி கூறியதாவது:

வெங்காயம் சாகுபடி செய்யும் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் இருந்து வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. அதே சமயம் தேவை குறையவில்லை. இதனால் வெங்காயத்தின் விலை உயா்ந்து வருகிறது. வரும் காலங்களில் திருமணம் மற்றும் பண்டிகைகள் வருவதால் இதே நிலை நீடித்தால் வெங்காயத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT