திருப்பூர்

வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

DIN

கோவை வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.88 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

கோவை, டாக்டா் பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை டி.எஸ்.பி டி.ஹெச்.கணேஷ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டனா்.

பல மணி நேர சோதனைக்குப் பின்னா் கணக்கில் வராத ரூ.88 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி டி.ஹெச்.கணேஷ் கூறுகையில், இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.88 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை அதிகாலை வரை தொடர முடிவு செய்துள்ளோம். சோதனைகள் முழுமையாக முடிந்த பின்னா் இதில் தொடா்புடைய நபா்கள் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்படும் என்றாா்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறையினா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT