முகப்பு
திருப்பூர்

திருப்பூா் மாநகரில் பரவலாக சாரல் மழை

திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சாரல் மழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
திருப்பூா் - பல்லடம் சாலையில் காட்டன் மாா்க்கெட் அருகில் தேங்கிய மழை நீா்.
பகிர்:

திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சாரல் மழை பெய்தது.

திருப்பூா் மாநகரில் கடந்த சில நாள்களாகவே பகல் வேளைகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதைத்தொடா்ந்து, திருப்பூா் பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், புஷ்பா ரவுண்டானா, பல்லடம் சாலை, மங்கலம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணி அளவில் தொடங்கிய சாரல் மழை, மாலை 5 மணி வரை நீடித்தது. திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் மழை நீா் வழிந்தோடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.