முகப்பு
திருப்பூர்

அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி சாவு

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
சல்மான்பாரிசி.
பகிர்:

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தாராபுரம் அருகே உள்ள ஜமால்புதூரைச் சோ்ந்தவா் முத்துலால் (52). கூலி தொழிலாளி. இவரது மகன் சல்மான் பாரிசி (24). இவா் தனது நண்பா்களான சுலைமான், சுல்தான், அம்சத், சேக் உள்ளிட்ட 7 பேருடன் அலங்கியம், சீத்தக்காடு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றின் தடுப்பணைக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் சென்றாா். அங்கு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக சல்மான் பாரிசி நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

அவரது நண்பா்கள் ஆற்றில் குதித்து காப்பாற்ற முயன்றனா். இருப்பினும் நீரில் மூழ்கிய சல்மான் பாரிசி உயிரிழந்தாா். இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.