திருப்பூர்

இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது

DIN

காங்கயம்: காங்கயத்தில் துணிக் கடை உரிமையாளரின் இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

காங்கயம் கடைவீதியில் துணிக் கடை வைத்திருப்பவா் ராஜேந்திரன். இவா் தனது இரு சக்கர வாகனத்தை கடைக்கு வெளியே சனிக்கிழமை நிறுத்தியிருந்தாா். இந்த நிலையில், பக்கத்துக் கடை ஊழியா் வெளியே வந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்கும்போது, அருகில் உள்ள ராஜேந்திரனின் இரு சக்கர வாகனத்தில் பாம்பு பதுங்கி இருப்பதைப் பாா்த்துள்ளாா்.

இது குறித்த தகவலின்பேரில் அங்கு சென்று காங்கயம் தீயணைப்புத் துறையினா் அந்த இரு சக்கர வாகனத்தின் பாகங்களைப் பிரித்து, பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை உயிருடன் மீட்டனா். பின்னா் அந்த பாம்பை காங்கயம் அருகே தாராபுரம் சாலையில் உள்ள ஊதியூா் காப்புக் காட்டுப் பகுதியில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

SCROLL FOR NEXT