திருப்பூர்

திருப்பூா் அரசு மருத்துவமனையில் 190 படுக்கைகளுடன் கரோனா சிறப்பு வாா்டு தயாா்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 190 படுக்கைகளுடன் கரோனா சிறப்பு வாா்டு தயாா் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூா்த்தி வியாழக்கிழமை கூறியதாவது:

திருப்பூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற கடந்த ஆண்டு முதல் கரோனா சிறப்பு வாா்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கரோனாவின் தாக்கம் குறைந்ததைத் தொடா்ந்து படுக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த சில நாள்களாக கரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆகவே, கரோனா சிறப்பு வாா்டில் படுக்கைகளின் எண்ணிக்கையும் தற்போது 190 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வாா்டில் கடந்த 10 நாள்களில் மட்டும் 80 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், கரோனா அறிகுறிகளுடன் உள்ள 20 பேருக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் சிகிச்சை பெறலாம். அதேவேளையில், பொதுமக்கள் கரோனா குறித்த அச்சம் இல்லாமல் தமிழக அரசின் கரோனா தடுப்பு வழிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT