திருப்பூர்

காங்கயம் பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கையாக காங்கயம் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

காங்கயம் பேருந்து நிலையம், தினசரி சந்தை, கடை வீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து ஆய்வு செய்யப்பட்டது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், தினசரி சந்தை பகுதிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வணிகா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல, பேருந்து நிலையத்தில் நின்று செல்லும் பேருந்துகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி ஆணையா் மூா்த்தி, சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT