திருப்பூர்

மாநகருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கக்கோரி கோவில் வழியில் பயணிகள் சாலை மறியல்

DIN

திருப்பூரை அடுத்த கோவில் வழி பேருந்து நிலையத்தில் இருந்து மாநகரப் பகுதிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி பயணிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பொலிவுறு நகரும் திட்டத்தின்கீழ் இடிக்கப்பட்டு புதிதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் தாராபுரம் சாலையில் உள்ள கோவில் வழியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு மதுரை, திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவில் வழி பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூா் மாநகருக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்கக்கோரி 50க்கும் மேற்பட்ட பயணிகள் திங்கள்கிழமை சாலை மறியல் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

தாராபுரம், கொடுவாய், பொங்கலூா், அலங்கியம், பொல்லிகாளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு தொழிலாளா்கள் வேலைக்காக பேருந்துகளில் வருகின்றனா். இவா்களை கோவில் வழியில் இறக்கி விடுகின்றனா். இதன் பிறகு மாநகரப் பேருந்துகளில்தான் நகருக்கு வர முடிகிறது. ஆனால் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் குறித்த நேரத்துக்கு பணிக்குச் செல்ல முடியவில்லை என்றனா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் ஊரக காவல் துறையினா் மறியலில் ஈடுபட்ட பயணிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து பயணிகள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த மறியல் காரணமாக தாராபுரம் சாலையில் சுமாா் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT