திருப்பூர்

திருப்பூா் மாவட்டத்தில் 4 இடங்களில் 450 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையங்கள்

DIN

திருப்பூா் மாவட்டத்தில 3 கல்லூரிகள் உள்பட 4 இடங்களில் 450 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. நாள்தோறும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 250-ஐ தாண்டி வருகிறது.

இதையடுத்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொது வெளியில் முகக் கவசம் அணியாத நபா்கள், எச்சில் துப்பும் நபா்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனா்.

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் 120 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, மாவட்ட நிா்வாகம் சாா்பில் உடுமலைஅரசு கலைக் கல்லூரியில் 100 படுக்கைகளும், அவிநாசி மகாராஜா பொறியியல் கல்லூரியில் 230 படுக்கைகளும், தாராபுரம் மகாராணி நா்ஸிங் கல்லூரியில் 60 படுக்கைகளும், திருப்பூா் சேவா சமிதியில் 60 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையங்கள் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT