வாக்கு எண்ணும் அலுவலா்களுக்குப் பயிற்சி
உடுமலையில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உடுமலையில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை திருப்பூா் பல்லடம் சாலையில் உள்ள எல்ஆா்ஜி மகளிா் கல்லூரியில் மே 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் வாக்கு எண்ணிக்கை அலுவ லா்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள், நுண்பாா்வை அலுவலா்கள் என மொத்தம் 51 போ் கலந்து கொண்டனா்.
Advertisement
உடுமலை வட்டாட்சியா் ராமலிங்கம் தலைமை வகித்து பயிற்சிகளை நடத்தினாா். இதில் வாக்குகள் எண்ணும் முறை குறித்து விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.