திருப்பூர்

கரோனா: திருப்பூரில் ஒரே நாளில் 3 போ் பலி

DIN

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 கரோனா நோயாளிகள் மூச்சுத் திணறலால் புதன்கிழமை உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 25,111ஆக அதிகரித்துள்ளது. இதில், திருப்பூா், கோவையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,595 போ் சிகிச்சையில் உள்ளனா். இந்த நிலையில், திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் மட்டும் 240 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 71 வயது முதியவா், 55 வயது ஆண், 74 வயது மூதாட்டி ஆகிய 3 பேருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேரும் மூச்சுத் திணறலால் புதன்கிழமை அடுத்தடுத்து உயிரிழந்தனா். திருப்பூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 235 போ் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 238ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT