திருப்பூர்

பூச்சித் தொல்லையால் பாதிப்பு: வட்டாட்சியரிடம் பொது மக்கள் மனு

DIN

பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம்புதூா் ஊராட்சி கோம்பத்தோட்டம் பகுதியில் பூச்சித் தொல்லையால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி அப்பகுதி மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் பல்லடம் வட்டாட்சியா் தேவராஜிடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்களது பகுதியில் உள்ள ஒரு தனியாா் கோழிப் பண்ணை நிறுவனத்தின் மக்காச்சோளக் கிடங்கில் இருந்து செல் மற்றும் பல்வேறு வகை பூச்சிகள் ஏராளாமாக உற்பத்தியாகி அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் வீடுகள், கடைகள், தோட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதனால் காதில் பஞ்சு வைத்துக் கொண்டு மட்டுமே நடமாட முடிகிறது. குழந்தைகளின் உணவுப் பொருள்களில் பூச்சிகள் காணப்படுகின்றன. இதனால் குழந்தைகள் உடல்நலம் பாதிப்படைந்துள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT