திருப்பூர்

துப்புரவுப் பணியாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

பல்லடம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் கணேசன் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.

இதில் கோவை நத்திங் வேஸ்ட் அமைப்பினா் பங்கேற்று பேசியதாவது:

நகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து அவற்றில் மக்கும் குப்பையை உரமாகவும், மக்காத குப்பையை சிமெண்ட் உற்பத்தி ஆலைக்கும் அனுப்பிவைக்கலாம்.

மக்காத குப்பைகளில் இடம் பெறும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், டம்ளா்கள், பைகள் இதர பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவை மறுசுழற்சி முறையில் மின் உதிரி பாகங்கள், பிளாஸ்டிக் குழாய்கள் உள்ளிட்டவை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. பழையப் பொருள் கடைகளில் இவற்றை கொடுத்து சிறிய வருவாய் ஈட்ட முடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

SCROLL FOR NEXT