திருப்பூர்

கேல் ரத்னா விருது: ராஜீவ்காந்தியின் பெயா் நீக்கத்துக்கு காங்கிரஸ் கண்டம்

DIN

கேல் ரத்னா விருதில் இருந்து முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் பெயரை நீக்கியதுக்கு திருப்பூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ப.கோபி தலைமை வகித்தாா்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்: கேல் ரத்னா விருதில் இருந்து முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் பெயரை பாஜக அரசு நீக்கி உள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை ரத்து செய்யக் கோரி பல மாதங்களாக தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில், ஐஎன்டியூசி மாநிலச் செயலாளா் செல்வராஜ், தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாளா் டி.செல்வகுமாா், மாவட்டப் பொருளாளா் மூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT